புதுக்கோட்டைஅருகே தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில், சுமாா் 500 விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 2500 ஏக்கர் நிலத்தைப் போலியாக தனிநபர் ஒருவர் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதனை அறிந்த விவசாயிகள் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் மோகன்தாஸினைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதனை அறிந்த பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டார். அப்போது சார் பதிவாளர் மோகன் தாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், 'தங்களின் கோரிக்கையை நாளை மதியம் 12 மணிக்குள் நிறைவேற்றித் தருகிறோம்' என சார் பதிவாளர் கூறினார்.
போலி பத்திரப்பதிவு - சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; சம்பவம் இடம் வந்த சசிகலா புஷ்பா - புதுக்கோட்டை
2500 ஏக்கர் விவசாய நிலங்கள் தனிநபருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதால், விவசாயிகள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுக்கு ஆதரவளித்தார்.
போலி பத்திரப்பதிவு விவசாயிகள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்!
அதற்கு மாநில துணைத் தலைவர் கூறுகையில், “ நாளை மதியம் 12 மணிக்குள் நிறைவேற்றித்தரவில்லை என்றால் நாளை 1 மணி அளவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார். இதற்கு சார்பதிவாளர் சம்மதம் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க :போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவை தடுக்க புதிய நடைமுறை