தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொற்பனைக்கோட்டை அகழாய்வு: தொடங்கிவைத்த அமைச்சர் - அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற அகழ்வுப் பணியினை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.

Minister Shiva.V. Meyyanathan
Minister Shiva.V. Meyyanathan

By

Published : Jul 30, 2021, 6:57 PM IST

புதுக்கோட்டை: திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சி, பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற அகழ்வுப் பணியினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனிருந்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை பகுதியில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு தொல்லியல் துறை அனுமதியுடன் அகழ்வுப் பணி இன்றைய தினம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் தொல்லியல் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக இந்த பொற்பனைக்கோட்டை பகுதியில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் இந்தக் கோட்டைப் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த அகழ்வுப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும், இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details