தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் - வீடியோவை பகிர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் - Dungong released back into the sea

வலையில் சிக்கிய ஆவுளியாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களின் வீடியோவினை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன், சுற்றுச்சூழலை உண்மையில் காப்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர் ராஜன்
சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர் ராஜன்

By

Published : Jan 5, 2021, 3:56 PM IST

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியைச் சேந்த மீனவர்கள், வலையில் சிக்கிய கடற்பசுவை (ஆவுளியா) மீண்டும் கடலுக்குள் விட்ட சம்பவத்தின் வீடியோவினை சுற்றுச்சூழல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான சுந்தர்ராஜன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ""வெள்ளியங்கிரி மலையில் காடுகளை கபளீகரம் செய்பவர்கள் கொண்டாடப்படுகிறார்கள், ஆனால் இங்கே கடல் பூர்வகுடிகள், சிக்கிய “ஆவுளியாவை (dugong)" காப்பாற்றி கடலில் விடுகிறார்கள். உண்மையில் சூழலை காப்பவர்கள் யாரென்று புரிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பறவைக் காய்ச்சலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details