புதுக்கோட்டை:ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்றுவது என்று முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளத்தைபொறுத்தவரை தமிழக அரசு அங்குள்ள கழிவுகளை அகற்றும் பணியில் கண்டிப்பாக ஈடுபடாது. மத்திய அரசுதான் அங்குள்ள அணுக்கழிவுகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை இது குறித்து சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக, சிறப்பாக வாதாடி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த வழிவகை செய்த தமிழக முதலமைச்சருக்கு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஆர்வலர்கள் சார்பில் புதுக்கோட்டையில் வரும் ஐந்தாம் தேதி முதலமைச்சருக்கு பாராட்டு விழா மற்றும் 'ஜல்லிக்கட்டு பாதுகாவலர்' என்ற பட்டம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இதற்காக புதுக்கோட்டையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்றுவது என்று முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.