தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவருகிறது.
மின்ச்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கறுப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்!
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முகத்தில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
dk
அதன் ஒரு பகுதியாக, நேற்று (ஆக. 26) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் தினக்கூலி ரூபாய் 380 உடனடியாக வழங்கிட வேண்டும், கேங்மேன் பதவியை ரத்துசெய்ய வேண்டும், உழைக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.