புதுக்கோட்டை அருகே வைத்தூர் கிராமத்தில் வயலில் நிலக்கடலை பறிக்கும் வேலையில் அப்பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெய்த மழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்த கலைச்செல்வி (40), லட்சுமி அம்மாள் (60), சாந்தி (35), விஜயா (38) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
மேலும், இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
மின்னல் தாக்கி நான்கு பேர் பலி இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சிக்கு தடைவிதிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்