புதுக்கோட்டை மாவட்டம், மணலூர் கிராம ஊரட்சிக்குட்பட்ட கார்காமலம் கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் குடும்பங்களாக வசித்துவருகின்றனர். கார்காமலம் கிராமத்தில், வீரன் என்பவரின் மனைவி வெள்ளாச்சி என்ற மூதாட்டி இறந்ததையடுத்து, சுடுகாட்டிற்குச் செல்ல சாலையில்லாமல் விளைந்த நெற்பயிரை மிதித்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கிராமத்தினர் வேதனையுடன் கூறினர்.
பல ஆண்டுகளாக நீடித்துவரும் இப்பிரச்னை குறித்து பலமுறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்று அம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.