தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திராவிட ஆட்சியை ஒழிக்க அதிமுக அரசு முன்வர வேண்டும்’- எச்.ராஜா - Pudukottai district news

புதுக்கோட்டை: திராவிட ஆட்சியை ஒழித்துக்கட்ட அம்மாவின் அரசு முழு மூச்சோடு செயல்பட வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா
எச்.ராஜா

By

Published : May 15, 2020, 12:55 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நிவாரண நலத்திட்ட உதவிகளை வழங்கிய பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “நாடு இன்று நரக வேதனையில் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் 130 கோடி மக்கள் உள்ள இந்த பாரத நாட்டில் பாதிப்பு என்பது குறைவுதான். அதேபோல இந்தியாவில் தான் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் (28%) அதிகமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்தியாவிற்கு கரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்கள் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு போன்றவை நியாயவிலை கடைகளில் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இந்த மாதமும் வழங்க தொடங்கியுள்ளனர். இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன.

மோடி அரசு உலகம் போற்றும் அளவிற்கு கரோணா பாதிப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் கீழ்த்தரமான நபர்களை வைத்துக்கொண்டு மோடியிடம் நிழல் யுத்தம் செய்ய வேண்டுமென்றால் ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகத்தில் உள்ள இவர்களின் கீழ்த்தரமான கதையை பிஜேபியில் ஒவ்வொரு தொண்டனும் சமூக வலைதளங்களில் பரப்ப நேரிடும் என்பதை நான் எச்சரிக்கிறேன்.

ஸ்டாலின் முதலில் தமிழன், பிரசன்னா, மனோ, தங்கராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்வதற்கு திராவிட கட்சிகளுக்கு வெட்கமாக இல்லையா? பாஜக ஒரு நாளைக்கு 5 கோடி பேருக்கு உணவு பொட்டலங்களை கொடுத்து உதவிகளை செய்து வருகிறது. அதனால் திமுக பிரதமர் மோடியை இழிவாக பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீண்டும் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்து வருகிறோம். திறமையான ஆட்சி படைத்த ஒரு நபர்தான் பிரதமர் மோடி, அவருக்கு கரோணா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். தமிழ் குடியை கெடுத்தது கருணாநிதி. அந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட அம்மாவின் அரசு முழுமூச்சோடு செயல்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை: கரோனாவிலிருந்து குணமடைந்த 14 வயது சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details