தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக ஆட்சியை குற்றம்சாட்டுவது சரியானது அல்ல'

புதுக்கோட்டை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டுவது சரியானது அல்ல என்று தேசிய சிறுபான்மையினர் நலத் துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

தேசிய சிறுபான்மையினர் நலத் துணைத்தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Nov 20, 2019, 11:35 PM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் பிரதம மந்திாியின் ஜன்விகாஸ் காாியக்ரம் திட்டம் (சிறுபான்மை இனபெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டம்) தொடா்பான அரசு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் தேசிய சிறுபான்மை நல ஆணையத் துணைத் தலைவா் ஜாா்ஜ் குாியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது சார்ஜ் குரியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “சிறுபான்மை பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை முன்னேற்றுவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு ஜன்விகாஸ் காாியக்ரம் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்காக 12 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இந்தியா முழுவதும் 319 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பல்வேறு காரணங்களுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மை மாணவர்கள் அரசுத் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.” எனக் கூறினார்.

தேசிய சிறுபான்மையினர் நலத் துணைத்தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர் ''இந்திய அளவில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மையினர்களும் அடங்குவர். பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டுவதும் அவர்கள் மீது தவறான கருத்துகள் பரப்புவதும் சரியானது அல்ல'' என்றார்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details