தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஐபி வரிசையில் சீட் இல்லை.. குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்பி! - 74 வது குடியரசு தின விழா

புதுக்கோட்டை குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த திமுக எம்பி எம்.எம். அப்துல்லாவிற்கு இருக்கை ஒதுக்காததால், விழாவை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினார்.

குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி
குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி

By

Published : Jan 26, 2023, 12:59 PM IST

குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி

புதுக்கோட்டை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. குடியரசு தின விழாவில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் விழா நடைபெறும் இடத்திற்கு முதல் ஆளாக வருகை தந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, விஐபிகளுக்கான இருக்கை ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த இருக்கைகளில் யார் யாருக்கு, எந்த இருக்கை என தெளிவாகப் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை.

இருப்பினும் தனக்கு இருக்கை ஒதுக்கப்படலாம் என எம்பி அங்குச் சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் யாரும் கண்டு கொள்ளாததால், அதிருப்தி அடைந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க:Republic day: ஆளுநர் முன்பு அணிவகுத்த 'தமிழ்நாடு வாழ்க' அலங்கார ஊர்தி!

ABOUT THE AUTHOR

...view details