புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அதன்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து பரப்புரை செய்த முதலமைச்சர், அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசும்போது, “அதிமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து வருகிறார். ஆனால், அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்துள்ளது.
கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் 6 பவுன் தங்க நகை தள்ளுபடி என பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த ஆட்சி இதோ கவிழ்ந்து விடும், அதோ கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால், தற்போது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து விட்டோம். நாங்கள் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறோம், ஸ்டாலின் தான் பாதாளத்திற்கு போகப் போகிறார்.