புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பாஜக சார்பில் 300 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்வில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர், "பொது இடங்களில் பிரதமரை விமர்சிக்கும் திமுகவினருக்குச் சனி பிடித்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பாஜக செய்துவருகிறது.
ஆனால் திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தினால் அக்கட்சியினர் மட்டுமே நலன் பெறுகின்றனர். மக்கள் யாரும் நலம் பெறவில்லை. தொலைக்காட்சியில் மட்டும் நிவாரணங்களை அள்ளிக் கொடுப்பதுபோல் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘கிளர்ச்சியை தூண்டுபவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’ - கருப்பு முருகானந்தம்