புதுக்கோட்டை: புதிய பேருந்து நிலையத்தில் உள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், "சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சி புரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்களும் விற்பனைக்கு உள்ளன.