திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம், ராஜகிரியைச்சேர்ந்த தியாகராஜன்(40) என்பவர், தனது வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரி செய்வதற்காக மணப்பாறை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
கடந்த நவ.4-ல் அறுவை சிகிச்சைக்காக, அறுவை சிகிச்சை அரங்கத்திற்குள் சென்றபோது மயக்க மருந்து செலுத்தும் மருத்துவர் பயமுறுத்தும் வகையில் பேசியதாகக்கூறப்படும் நிலையில், அறுவை சிகிச்சை அரங்கை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதே மருத்துவர் மயக்கமருந்து செலுத்த வந்ததால், ’தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ளமாட்டேன் எனவும்; மாற்று மருத்துவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றும், இல்லையென்றால் இன்று (நவ.9) மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும்’ பேசி உள்ளார்.