தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயணைப்புத் துறை வாகனத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி - The panchayat leader is providing awareness brochures and masks

புதுக்கோட்டை: கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக திருமயத்தில் தீயணைப்புத் துறை வாகனத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை வாகனத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி
தீயணைப்புத்துறை வாகனத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி

By

Published : Mar 29, 2020, 8:33 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்குள்பட்ட அரசு பொது மருத்துவமனை சந்தப்பேட்டை கடைவீதி, தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், பள்ளி கட்டட வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் தலைமையில் அரசு அலுவலர்கள் தீயணைப்புத் துறை வாகனத்தில் தண்ணீர் டேங்கில் கிருமிநாசினி ஊற்றி அதனை எல்லா பகுதிகளுக்கும் தெளித்துவருகின்றனர்.

தீயணைப்புத் துறை வாகனத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாகத் தீயணைப்புத் துறை வாகனத்தில் மருந்து தெளிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுவந்தனர். மேலும் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் விழிப்புணர்வு பிரசுரங்கள், முகக்கவசங்கள் வழங்கிவருகிறார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details