புதுக்கோட்டைமாவட்டம் திருமயத்தை அடுத்த கீழாநிலைக்கோட்டை பகுதியைச்சேர்ந்தவர்கள் தனபால் - அமுதா தம்பதியினர். இவர்களுக்கு நவதாரணி என்ற மகளும், அஜிதரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் பிறப்பிலேயே மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துள்ளனர். காலப்போக்கில் வளர்ச்சியில்லாமல் இருவரும் இருந்து வந்த நிலையில் பலரின் இழிசொல்லுக்கு ஆளாகியும் உள்ளனர்.
பல்வேறு புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் சிறு வயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரியாகத் திகழ்ந்த, நவதாரணி, மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலையாமல் இருந்துள்ளார். ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தந்தை தனபாலின் கடின உழைப்பாலும், தாய் அமுதாவின் அரவணைப்பாலும் எந்த துன்பத்திற்கு ஆளாகாமல் வளர்ந்த நவதாரணி, தான் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தைக் கலைக்காமல், கனவில் மருத்துவராகவே வாழ்ந்து வந்துள்ளார்.
மருத்துவராக்கிய மகத்தான முயற்சி;இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க அவருக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் நவதாரணி எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.