2020ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அறிவிப்புக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மத்தியில் இந்த அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தனபதி கூறும்போது, 'வேளாண்மைக்கென ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, அதற்கென தனித் தனியாக நிதி ஒதுக்கி இருக்கலாம்.
விவசாயிகள் சங்கத் தலைவர் தனபதி இவர்களது நிதி ஒதுக்கீடு விருந்தில் வைக்கப்பட்ட சிறிய இனிப்பு போன்றது. கடந்த ஆண்டு அறிவிப்பை விட, இந்த ஆண்டு பரவாயில்லை என்றாலும் கூட, விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. நாட்டில் எத்தனையோ விவசாயிகள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதேபோல, நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கான எந்த ஒரு நிதியும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகள் எல்லாம் கடன்காரர்களாக ஆகிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிதி ஒதுக்கீடு இருக்கப்பட்டவர்களுக்குத் தானே, தவிர இல்லாதவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020: வரவேற்று அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி