தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண் சட்டம் 2020  Demonstration in support of struggling farmers in New Delhi  dyfi protest in pudhukottai  Demonstration in support of farmers  விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்  புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்  agriculture amendment bill 2020
dyfi protest in pudhukottai

By

Published : Dec 1, 2020, 12:16 AM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் ஏர் கலப்பை, பயிர்களோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது ஏர் கலப்பையில் கயிறு கட்டி தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details