தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

70 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த புள்ளி மான் - விரைந்த தீயணைப்புத் துறை! - Dotted deer in a 70-foot well

புதுக்கோட்டை: சுந்தரம் வயல் பகுதியில் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

்ே்ே
ே்

By

Published : Mar 11, 2020, 11:45 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் சுந்தரசோழபுரம் ஊராட்சியில் சுந்தரம் வயல் பகுதி உள்ளது. இங்கு சுற்றித்திரிந்த மான் திடீரென்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

புள்ளி மான் மீட்பு

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையிலான மீட்புப் படை வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மானை உயிருடன் மீட்டு வெளியே தூக்கி வந்தனர். இதையடுத்து, புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

இதையும் படிங்க:குமரியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details