தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வங்கியில் பணம் எடுப்பதில் சிக்கல்’ - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்! - pudukkottai atm server problem

புதுக்கோட்டை: மூன்று நாள்களாக வங்கியில் பணம் எடுக்க முடியாத காரணத்தால் அவ்வங்கி வாடிக்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்!

By

Published : Oct 8, 2020, 8:28 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த முக்கண்ணாமலைப்பட்டியில் ஒரு கனரா வங்கி உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த வங்கிதான் முக்கிய பண பரிவர்த்தனை மையம். இங்கு நாள்தோறும் அதிகளவில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதும், செலுத்துவதுமாக இருந்து வந்த நிலையில், தற்போது சர்வர் பிராப்ளம் எனக் கூறி தொடர்ந்து மூன்று நாள்களாக பணம் எடுக்க முடியாமல் போனது.

இன்று (அக். 08) தொடர்ந்து 4ஆவது நாளாக இதே நிலைமை நீடித்ததால் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்!

இதைத் தொடர்ந்து, வங்கி அலுவலர்கள், காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து இன்டர்நெட் வசதியை சரி செய்து பணம் எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details