தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுய ஊரடங்கு வெறிச்சோடிய புதுக்கோட்டை - tamilnadu government

புதுக்கோட்டை: பிரதமர் மோடியின் வேண்டுக்கோளை ஏற்று சுய ஊரடங்கிற்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு நல்கினர்.

சுய ஊரடங்கு வெறிச்சோடிய -புதுக்கோட்டை மாவட்டம்
சுய ஊரடங்கு வெறிச்சோடிய -புதுக்கோட்டை மாவட்டம்

By

Published : Mar 22, 2020, 9:45 PM IST

உலகையே உலுக்கிக் கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

சுமார் 370க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் இன்று சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பரபரப்பாக இருக்கும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஒன்று. ஆனால் இன்று ஆள் நடமாட்டம் இன்றி முற்றிலும் வெறிச்சோடியது.

சுய ஊரடங்கு வெறிச்சோடிய புதுக்கோட்டை மாவட்டம்

பேருந்து நிலையம், பூங்கா, சந்தை, என அனைத்திலும் ஒரு நபர் கூட நடமாட்டம் இல்லாமல் முற்றிலுமாக வெறிச்சோடிக் காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருமயம், பொன்னமராவதி விராலிமலை, கந்தர்வகோட்டை என அனைத்துப் பகுதிகளும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுக்கோளை ஏற்று சுய ஊரடங்கிற்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வருவது பாராட்டுதலுக்குறியது.

இதையும் படிங்க :ரூபாய் நோட்டு மூலம் பரவுமா கரோனா - அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details