தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை! - போக்சோ சட்டம் 17 ஆண்டுகள் சிறை புதுக்கோட்டை

புதுக்கோட்டை: 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைதான இளைஞருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Pudukkottai pocso case judgement culprit sentenced

By

Published : Oct 4, 2019, 9:56 AM IST


புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த, 16 வயது இளம்பெண் ஒருவரை, கடந்த 2016ஆம் ஆண்டு திருமயம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருமயம் அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வழக்கின் விசாரணைபுதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில்நேற்றுதீர்ப்பு வழங்கப்பட்டது. மகிளா கோர்ட் நீதிபதி ராஜலட்சுமி, இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்முறை செய்த இளைஞர் சுரேஷ்குமாருக்கு 17 ஆண்டுகால சிறைத்தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Pudukkottai pocso case judgement

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து, காவல் துறையினர் சுரேஷ்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் ஏற்கனவே ஒரு முறை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும், ஒருமுறை புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையிலிருந்தும் தப்பிச்சென்று மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காமக்கொடூரன் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details