தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து! 6 பேர் படுகாயம்! தைல மர காட்டிற்கு பரவிய தீ போராடி அணைப்பு! - வெயில் தாக்கத்தால் தீ விபத்து

பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

புதுக்கோட்டை வெடி தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து
புதுக்கோட்டை வெடி தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து

By

Published : Jul 30, 2023, 9:40 PM IST

புதுக்கோட்டை வெடி தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து

புதுக்கோட்டை:வெள்ளனூர் காவல் நிலையம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த வைரமணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமாக பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ள நிலையில், வைரமணி அரசு உரிமம் பெற்று இந்த பட்டாசு ஆலையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள் மற்றும் அனைத்து விதமான விழாக்களுக்கும் வெடி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 30) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இருப்பினும் ஆறு பேர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நபர்கள் ஆலையை விட்டு வெளியே ஓடி வந்து உள்ளனர். இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!

பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி லேசான காயத்துடனும், மற்ற ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த 6 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீ அனைக்கும் வீரர்களுக்கு தகவல் அனுப்பிய நிலையில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்பொழுது அந்த இடத்தில் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இச்சம்பவம் நடந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

வெயிலினால் தீ பற்றி இருக்கலாம் அல்லது வேறு ஏதும் வகையில் தீ பற்றி உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் ஆலையின் அருகே உள்ள தைலம் மரங்கள் தீ பற்றி எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் இது போன்ற தீ விபத்துக்கள் தினந்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் கின்னஸ் சாதனை மாரத்தான் போட்டி..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details