புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞான பாண்டியன் (40). . இவர் அதே பகுதியில் ஒரு சிறிய கடை நடத்தி வந்தார். இவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மே.14) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள், முறையான சிகிச்சை அளிக்காததால் ஞான பாண்டியன் உயிரிழந்ததாக கூறி, பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போஸ் நகர் மின்மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.