புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா மேகராஜன். இவர் தற்போது 19 வார்டு மாவட்ட கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த கஜா புயல் பாதிப்பின் போது தனது ஊராட்சியினை சேர்ந்த கிராம மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்.
தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்தத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ள நிலையில் அன்றாட அத்தியவாசியப் பொருள்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
மக்களுக்கு கோழிகளை இலவசமாக வழங்கிய கவுன்சிலர் மேலும் காய்கறி, மளிகை பொருள்கள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பிராய்லர் இறைச்சி வாங்க முன்வந்தனர். இதை அறிந்த கடைகாரர்கள் பிராய்லர் இறைச்சியை கிலோ 250 ரூபாய் வரை உயர்த்தினர்.
இதனையடுத்து கவுன்சிலர் சரிதா மேகராஜன் தனது கோழிப்பண்னையில் வளர்ந்த பிராய்லர் கோழிகளை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து உதவினார். அப்போது மக்களிடம் சமூக விலகலை கடைபிடித்து கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கும் காவல் துணை ஆணையர்!