புதுக்கோட்டையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா வைரஸை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இதுவரை சீனாவிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 174 பேர் வந்துள்ளனர்.
இதில் 118 பேரின் 28 நாள் கண்காணிப்புக் காலம் முடிவடைந்துள்ளது. எஞ்சிய நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். மேலும், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.