தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

புதுக்கோட்டை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

அரசு பேருந்திற்கு கிருமி நாசினி தெளிப்பு
அரசு பேருந்திற்கு கிருமி நாசினி தெளிப்பு

By

Published : Mar 18, 2020, 11:35 PM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 52 நகரப் பேருந்துகளுக்கும், 55 புறநகர் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கை கழுவும் முறை குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

அரசுப் பேருந்தில் கிருமி நாசினி தெளிப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் உமா மகேஸ்வரி கூறுகையில், "புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கை கழுவுவோம், கரோனாவை விரட்டுவோம்'- கேரள காவலர்கள் விழிப்புணர்வு நடனம்!

ABOUT THE AUTHOR

...view details