புதுக்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 28) ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்றி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. லேசான இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு தகுந்த சிகிச்சை பெறவும்.
ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சையளிப்பதன் மூலம் இறப்பை தடுக்க முடியும். இதனால் இறப்பு விகிதமும் குறையும். மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 43ஆயிரத்து 930 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் பாசிட்டிவ், நெகட்டிவ் என அனுப்பும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கபட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 பேருக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பரிசோதனை மேற்கொள்ளபடுபவர்கள் 18 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். இந்த பரிசோதனை விரைவில் தொடங்கவுள்ளது. வருகின்ற 31ஆம் தேதி 103 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 எண்ணிக்கை கொண்ட 108 ஆம்புலன்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க:ஏழை பெண்களுக்கு அசில் இன நாட்டுக் கோழி வழங்கிய அமைச்சர்கள்!