புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் கரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பதை பொதுச் சுகாதாரத் துறையினர் உறுதி செய்து இலுப்பூர் பேரூராட்சிக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வரச் சென்றபோது கரோனா தொற்று கண்டறியப்பட்ட அந்த சிறுவன் வீட்டிலிருந்து மாயமானது தெரியவந்தது. இதையறிந்த இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, காவல் நிலையத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட சிறுவன் மருத்துவமனைக்கு வராமல் நோய் பரப்பும் விதமாகச் சுற்றித் திரிந்து வருவதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.