தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - collector conference meeting

புதுக்கோட்டை: கோவிட் தடுப்பு நடவடிக்கைகள், தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

By

Published : Jun 3, 2021, 9:12 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (ஜூன்.03) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி ’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தென்மேற்குப் பருவமழையின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்து மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீனவர்களுக்கு தகுந்த முன்னேற்பாடு பணிகள் செய்து தரப்பட வேண்டும். மின்சாரத்துறையினர் பேரிடர்களால் பாதிக்கப்படும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.

வட்டாட்சியர் தினமும் காலை ஏழு மணிக்குள் தங்களது வட்டங்களில் முதல் நாள் பெய்த மழையின் அளவு, குடிசை வீடுகள் சேதம், கால்நடை இழப்பு, மனித உயிர்கள் இழப்பு, பயிர்கள் சேதம், பேரிடர் குறித்த இதர தகவல்களையும் தவறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும் 1077, 04322-222207 என்ற அவசர கட்டுப்பாட்டு மைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க வேண்டும். இந்தத் தகவல்களை அறிக்கை வடிவில் தனிநபர் மூலம் அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ பூண்டி கலைவாணன்

ABOUT THE AUTHOR

...view details