தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தையின் கல்லறையில் கதறி அழுத காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரமங்கை - தந்தைக்கு லோக பிரியா அஞ்சலி

நியூசிலாந்து காமன்வெல்த் சாம்பியன்ஷிப் தொடரின் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவி லோக பிரியா, அவரது தந்தையின் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தியது காண்போரை கண்கலங்கச் செய்தது.

லோக பிரியா
லோக பிரியா

By

Published : Dec 5, 2022, 10:44 PM IST

புதுக்கோட்டை:கந்தர்வகோட்டை அடுத்த கல்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த மாணவி லோக பிரியா, நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் பளு தூக்கும் விளையாட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.

காமன்வெல்த் போட்டி நடந்து கொண்டு இருந்தபோது லோக பிரியாவின் தந்தை திடீரென உயிரிழந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் லோக பிரியாவால் கலந்து கொள்ள முடியவில்லை.

தாயகம் திரும்பிய நிலையில் தன் தந்தையின் நினைவிடத்தில் லோக பிரியா அஞ்சலி செலுத்தினார். தன் தந்தையின் கல்லறையைப் பிடித்து கண்ணீர் விட்டு லோக பிரியா கதறி அழுதது காண்போரின் இதயத்தை கனக்கச் செய்தது. தொடர்ந்து பதக்கம் வென்று தாயகம் திரும்பிய லோக பிரியாவுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.

தந்தையின் கல்லறையில் கதறி அழுத காமன்வெல்த் வீரமங்கை

இதையும் படிங்க:20ஆண்டுகளாக கிடைக்காத பாசன வசதி - அரசுக்கு தஞ்சை விவசாயிகள் வைத்த கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details