தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று வயது குழந்தை மூக்கில் கொலுசு முத்து - லாவகமாக எடுத்த மருத்துவர்! - Colus pearl in 3-year-old child's nose: doctor taken for profit!

புதுக்கோட்டை: மூன்று வயது குழந்தை மூக்கிலிருந்த கொலுசு முத்தை, மருத்துவர் லாவகமாக எடுத்தார்.

Pudukottai doctor remove the kolusu ball from 3 year old child
Pudukottai doctor remove the kolusu ball from 3 year old child

By

Published : Apr 13, 2020, 1:34 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த தீயதூரைச் சேர்ந்த மிதுனா ஸ்ரீ (3) வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக காலில் அணிந்திருக்கு கொலுசு மணியை மூக்கில் விட்டுள்ளார். இதனால் மூக்கில் சென்றதால் வழியில் துடித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள் கவனித்து குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு அங்கு பணியிலிருந்த மருத்துவர் முகமது ரபிக், குழந்தையின் மூக்கில் உள்ள கொலுசு முத்தை லாவகமாக எடுத்துள்ளார்.

மூன்று வயது குழந்தை மூக்கில் கொலுசு முத்து - லாவகமாக எடுத்த மருத்துவர்!

இந்த சம்பவத்தால் அனைவரும் மருத்துவரைப் பாராட்டி வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆபத்தான பொருள்களை கையில் கொடுக்கக்கூடாது என்றும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் எனவும் மருத்துவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details