தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: வாயில் கறுப்புத்துணியுடன் கல்லூரி மாணவர்கள் முழக்கம் - SFI Protest in Tamil Nadu

புதுக்கோட்டை அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக வாயில் கறுப்புத்துணி கட்டியபடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 8, 2022, 10:58 PM IST

புதுக்கோட்டை:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை இந்தியில் நடத்தவும், மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காகவும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற குழுவின் முடிவை திரும்பப்பெறக் கோரியும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் உள்ளிட்டப் பல தரப்பினரும் போராட்டம் செய்துவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, கறம்பக்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (நவ.8) இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத் துணியுடன், இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: வாயில் கறுப்புத்துணியுடன் கல்லூரி மாணவர்கள் முழக்கம்

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின்போது, இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீசார், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை பேச்சு - காங்., எம்எல்ஏவுக்கு பாஜகவினர் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details