புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டை அருகே உள்ள நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் - பார்வதி தம்பதியினர். இவர்களது மகள் மாலினி(19).
கடந்த 19ஆம் தேதி மதியம் கொள்ளைக்கு சென்றுவிட்டு வருவதாக சென்ற மாலினி(19) நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் இரவு பகலாக தேடியும் அவரை கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று(அக்.21) மதியம் வயலுக்கு சென்றபோது அங்கிருந்த கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.