சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி விளக்கி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தாலும் ஜல்லிக்கட்டுப் போட்டி, கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதற்குத் தடை இல்லை. தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும்.
6 சட்டப்பேரவைத் தொகுதிரகளிலும் 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 12 காணொலி கண்காணிப்புக் குழுக்கள், 18 தணிக்கை கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அவர்கள் கண்காணிப்புப் பணியில் சுழற்சிமுறையில் பணியாற்ற உள்ளனர். மாவட்டத்தில் 1902 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.