தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவில் எல்லைப் பகுதியை நேரில் ஆய்வுசெய்த புதுக்கோட்டை ஆட்சியர்!

புதுக்கோட்டை: மச்சுவாடியில் உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடியினை நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

collector
collector

By

Published : Apr 1, 2020, 12:04 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. அத்தியாவசிய தேவையின்றி மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் உள்ள 18 சோதனைச் சாவடிகள், நான்கு சுங்கச்சாவடிகள், மாவட்டத்தின் உள்பகுதிகளில் 42 என மொத்தம் 64 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் இரவு, பகலாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மச்சுவாடியில் உள்ள காவல் துறையின் சோதனைச் சாவடியினை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

எல்லைப் பகுதியை நேரில் ஆய்வுசெய்த புதுக்கோட்டை ஆட்சியர்

பின்னர் அவர் கூறுகையில், "அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் வாகனங்கள் உரிய அனுமதியுடன் அனுமதிக்கப்படுகிறது. தேவையற்ற பயணங்களை மேற்கொண்டுள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்த்து ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:புடினுக்கு கைகொடுத்த மருத்துவருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்யா!

ABOUT THE AUTHOR

...view details