புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக சுற்றித்திரிந்த 150-க்கும் மேற்பட்ட மாடுகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்பிரமணியம் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் உடன் சென்று பிடித்து நகர்மன்ற வளாகத்தில் அடைத்துவைத்தனர்.
இந்நிலையில், மாடுகளின் உரிமையாளர்கள் நேரில் வந்து அலுவலர்களிடம் அபராதத் தொகை செலுத்திவிட்டு மாடுகளை அழைத்துச் சென்றனர். மேலும், மீண்டும் மாடுகள் இதேபோல் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.