தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடிகள் போல் செயல்படும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்னவாகும்? எடப்பாடி பழனிசாமி கேள்வி - புதுக்கோட்டை

புதுக்கோட்டை: உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் திமுகவினர் அவர்களை தாக்குகின்றனர். தாக்கியவர்களை ஸ்டாலின் சென்று காப்பாற்றி வருகிறார். இப்படிப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும் ? என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

By

Published : Apr 1, 2019, 11:34 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் மற்றும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது
அவர் பேசியதாவது, "மக்களின் தேவையறிந்து அதனை பூர்த்தி செய்வதே நமது கூட்டணி கட்சிகளின் நோக்கம் ஆகும். இதை மனதில் வைத்துதான் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தும்,கர்நாடக அரசு நீதிமன்ற தீர்ப்புபடி தண்ணீர் திறக்க மறுக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். அதிமுக கூட்டணிவெற்றி பெற்றுமத்தியில் பாஜக ஆட்சிஅமையும் பட்சத்தில் காவிரி-கொள்ளிடம் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். ஆனால்தினந்தோறும்திமுகவினரின் அராஜகம் அதிகரித்து வருகிறது. உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் அவர்களை தாக்குகிறார்கள், தாக்கியவர்களை ஸ்டாலின் சென்று காப்பாற்றி வருகிறார். இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் மக்களின் நிலைமை என்னாவது என சிந்தித்து பார்க்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details