திருச்சி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (டிச.31) மாலை விராலிமலை சென்றார். அப்போது விராலிமலை பைபாஸ் சாலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், "பொதுமக்கள் என்றைக்கும் இரட்டை இலையை மறக்கக்கூடாது. இரட்டை இலைக்கே வாக்களிக்க வேண்டும். விராலிமலை பகுதி ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் நிறைந்த பகுதி. கடந்த முறை நான் வந்த போது ஜல்லிக்கட்டு காளை சிலையை விராலிமலையில் திறந்து வைத்தேன்.