புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகரணத்தில் உள்ள பிரசித்திபெற்ற பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெரும்திருவிழாவை முன்னிட்டு ஆடிப்பூர தேரோட்டம் இன்று(ஜூலை 31) நடைபெற்றது. தேரோட்டம் தொடங்கிய நிலையில் கோயில் அருகிலேயே தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில் 5 பேர் மயக்கமுற்றனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.