தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு - இளைஞர் கைது - வீட்டில் உறங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு

புதுக்கோட்டையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குற்றவாளி கைது
குற்றவாளி கைது

By

Published : Dec 11, 2022, 7:15 PM IST

புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அவர் கூச்சலிட்டுள்ளார். இதனால் தங்கச்சங்கிலியை பறிக்க வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து அதே பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே 24 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கண்ணனூர் மேலதுருவாசபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் மாதவன் (24) என்பது தெரியவந்தது. அதோடு அவர் ராஜலெட்சுமி என்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜலெட்சுமி உடன் புகாரை பெற்ற கறம்பக்குடி காவல் துறையினர் மாதவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஓடும் காரில் தாய்க்கு பாலியல் தொல்லை; 10 மாத குழந்தையை வெளியே வீசிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details