புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதை மத்தியக்குழு பாராட்டியுள்ளது. சிறப்பு கண்காணிப்புக்குழு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு முழு அர்ப்பணிப்போடு கரோனா தடுப்புப் பணிகளை செய்து வருகிறது. சென்னையில் நான்கு அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 55 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.