தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி இயங்கிய சிமெண்ட் கடைக்கு சீல்! - 144 தடை உத்தரவை மீறி கடைக்கு சீல்

புதுக்கோட்டை: 144 தடை உத்தரவை மீறி கடையை திறந்து விற்பனை செய்த சிமெண்ட் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

சிமெண்ட் கடைக்கு சீல்
சிமெண்ட் கடைக்கு சீல்

By

Published : Apr 24, 2020, 1:29 PM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்குவதற்காக கால நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை திலகர் திடல் எதிரே உள்ள தனியார் சிமெண்ட் கடையில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து, சிமெண்ட் கம்பிகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் கரோனா பெருந்தொற்று ஏற்படும் வகையில், அதிகளவில் தொழிலாளர்களை வைத்து அக்கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது என்ற ரகசிய தகவல் கோட்டாட்சியர் தண்டாயுதபாணிக்கு தகவல் கிடைத்தது.

தடையை மீறி இயங்கிய சிமெண்ட் கடைக்கு சீல்

அதன் அடிப்படையில், அவர் சிமெண்ட் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்ததை அடுத்து, அந்தக் கடைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் உடனடியாக அடைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:இன்றைய காய்கறி விலை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details