புதுக்கோட்டை:நமுணசமுத்திரம் காவல் நிலையம் அருகே புதுக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் இரண்டு சிறுவர்கள் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இது குறித்து அருகில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர், நமணசமுத்திரம் காவல் துறையினர் மற்றும் அவசர ஊரதி பணியாளர்கள் ஆகியோர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:தடுப்பூசியால் 4 மாத குழந்தை உயிரிழப்பு என புகார் - சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் என்ன?