புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பூர் என்ற இடத்தில் பொன்னம்பலத்தை சேர்ந்த 8 பேர் காரில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் கருப்பையா என்பவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு - ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
accident
காரில் பயணம் செய்த ராதிகா(38), சித்ரா(45), கனிமொழி(23), கோபிகா(8), சபரீஸ்வரன்(8), விக்னேஸ்வரன்(14), வர்ணன்(8) ஆகிய ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.