தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பேருந்து நடத்துநர் உயிரிழப்பு - bus conductor

புதுக்கோட்டை: மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, சிகிச்சை பெற்று வந்த பேருந்து நடத்துநர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனோகரன்
மனோகரன்

By

Published : Jul 31, 2021, 7:32 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் மனோகரன் (41). இவர் இலுப்பூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில், பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.

மனோகரன் கடந்த 29ஆம் தேதி காலை ஆலத்தூரிலிருந்து, இலுப்பூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழேவிழுந்ததில் படுகாயமடைந்தார்.

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த மனோகரன், இன்று (ஜூலை 31) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கடன் பிரச்னையில் இளைஞர் கொலை: கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details