புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை பகுதியை சேர்ந்தவர் மாணவி அலிமத்துசாதியா. இவரது தந்தையார் அப்துல் லத்தீப் ஒரு கூலித் தொழிலாளி. தாயார் ஜன்னத்து சுறுதோஸ். அலிமத்துசாதியா சிறுவயதில் இருந்தே கண்பார்வை அற்றவர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தஅலிமத்துசாதியா, பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.
இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது, நான் பார்வையற்றவராக பள்ளியில் சேரும் பொழுது என்னை அனைவரும் கேலி செய்தார்கள். ஆசிரியர்கள் கூட என்னை கேலி செய்தார்கள். ஏன் பள்ளியில் கூட சேர்த்துக் கொள்ளவில்லை. இத்தனை கேலிப் பேச்சுகளையும் மனதில் வாங்கிக் கொண்டு இரவு பகலாக படித்தேன். அதன் விளைவாக பொதுத் தேர்வில் 478 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளேன்.
எனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார்.