புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை திலகர் திடலில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவிருந்தது.
அந்த போராட்டத்தை நடத்துவதற்கு காவல் துறை அனுமதியளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டத்திற்கு பதிலாக விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.