தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அல்லேலுயா பாபு' என அமைச்சர் சேகர் பாபுவை விமர்சித்த எச்.ராஜா!

அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலினை, அல்லேலுயா பாபு மற்றும் கிறிஸ்த்துவ உதயநிதி என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

எச்.ராஜா
எச்.ராஜா

By

Published : Jan 2, 2023, 11:55 AM IST

Updated : Jan 2, 2023, 12:07 PM IST

எச்.ராஜா அளித்த பேட்டி

புதுக்கோட்டை: வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: "கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2,000 கோயில்களை புனராவர்த்தனம் செய்வதற்கு பரிசலீப்பதாக கூறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையே அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற தீர்ப்பில் 44,000 கோயில்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில், அமைச்சர் சேகர் பாபுவோ அல்லேலுயா பாபுவோ எனக்கு தெரியவில்லை அவர் 36,000 கோயில் இருப்பதாக கூறுயிருக்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது. முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் கிறிஸ்தவர்களாக இருப்பதால், இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். தேவாலயங்களையோ, மசூதியயோ கைபற்ற முதுகெலும்பு உள்ளதா அந்த கிறிஸ்துவ உதயநிதி ஸ்டாலினுக்கு? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய எச்.ராஜா, அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பொங்கல் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். கபாலீஸ்வரர் கோயிலில் கருணாநிதியை போற்றி என்று எழுதியவர்கள் தான் இந்த திராவிட ஸ்டாக்குகள். எழுதாத பேனாவுக்கு எதற்கு சிலை” என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 3 பேர் பலி!

Last Updated : Jan 2, 2023, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details