ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் என்பவர், கரூர் மக்களவை உறுப்பினரான ஜோதிமணியை ஒருமையிலும், மரியாதைக் குறைவாகவும் பேசினார்.
கரு. நாகராஜன் அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென நிகழ்ச்சியின் நெறியாளர், இதர பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொண்டாலும் கரு. நாகராஜன் தொடர்ச்சியாக முகம் சுழிக்க்கூடிய வகையில் பேசிக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியிலிருந்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வெளியேறினார். இந்நிகழ்வு சமூக ஊடங்களில் பெரும் பேசு பொருளானது.
காங்கிரஸ் பிரமுகரும் வழக்கறிஞருமான வெல்லிங்டன், பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என உள்துறை செயலாளர், காவல் துறை இயக்குநர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
கரூர் எம்.பி. ஜோதிமணி மீது புகாரளித்த பாஜகவினர் இந்தச் சூழ்நிலையில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அந்த குறிப்பிட்ட விவாத நிகழ்ச்சியில் பிரதமரை மரியாதைக்குறைவாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர், விராலிமலை, மணமேல்குடி காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பொது இடங்களில் பிரதமரை விமர்சிக்கும் திமுகவிற்குச் சனி...!'